தேர்த்ல்-தமிழ் கூட்டமைப்புகள் திமுகவுக்கு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க போவதாக தமிழ் கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது.
தமிழ் கூட்டமைப்புகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் தலைமை வகித்தார். மு.செல்வராசு முன்னிலை வகித்தார்.
அந்த கூட்டத்தில்,
தமிழை செம்மொழியாக அறிவித்து பெருமை தேடி தந்தது திமுக தான். அதே போன்று தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட 150க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியது முதல்வர் கலைஞர் கருணாநிதி தான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியதும் திமுக அரசு தான். எனவே நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பது முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications