தலைமறைவான காந்தமால் பாஜக வேட்பாளர் கைது
புவனேஸ்வர்: கிறிஸ்தவர்களை எச்சரிக்கும் வகையில் பேசி விட்டு தலைமறைவான பாஜகவின் காந்தமால் வேட்பாளர் அசோக் சாகு கைது செய்யப்பட்டார்.
சர்ச்சைக்குரிய ஒரிசா மாநிலம் காந்தமால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் சாகு. ஏப்ரல் 5ம் தேதியன்று அவர் ராய்கியா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், கிறிஸ்தவர்களை எச்சரிக்கும் வகையில் விஷமமாக அவர் பேசினார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவரைக் கைது செய்ய தேடி வந்தனர். நயாகார் மாவட்டத்தில் அவர் ஒரு வீட்டில் இருந்தபோது அங்கு போலீஸார் சென்றனர். ஆனால் கையில் வாரண்ட் இல்லாததால் சாகுவைக் கைது செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் சாகு தப்பி தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று காலை அவர் பூல்பானி நகரில் கைது செய்யப்பட்டார்.
சாகு ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆவார். சாகு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்










Click it and Unblock the Notifications