திமுகவுக்கு நெருக்கடி தருவாரா இல.கணேசன்

எதிலுமே நிதானமாக அடியெடுத்து வைப்பவர் இல.கணேசன். ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆரம்பத்தில் இருந்தவர். அங்கிருந்து பாஜகவுக்கு வந்தவர்.
தஞ்சையில் பிறந்த இல.கணேசன் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரசுப் பணியில் இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் ஈடுபாடு ஏற்படவே அரசுப் பணியைத் துறந்து விட்டு அதில் இணைந்தார்.
பின்னர் படிப்படியாக பாஜகவில் நுழைந்தார். 2002ம் ஆண்டு முதல் 2006 வரை பாஜக தேசிய செயலாளராகப் பணியாற்றினார்.
தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றிய அவரை தமிழகத்தில் கட்சியை வலுவாக்கும் நோக்கில் மாநிலத் தலைவராக நியமித்தது பாஜக மேலிடம்.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என இரு தலைவர்களிடமும் நெருங்கிப் பழகியவர். மாற்றுக் கட்சியினரிடமும் பண்போடு பழகக் கூடியவர். இனிமையாக பேசக் கூடியவர். தனது பதிவுகளை ஆழமான வார்த்தைளாலும், கருத்துக்களாலும் பதிவு செய்யத் தவறாதவர்.
தென் சென்னையில் திமுகவின் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அதிமுகவின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரை எதிர்த்து களம் கண்டுள்ளார்.
இருவருமே பெரும் பலத்துடன் விளங்கும் நிலையில், பாஜகவின் வாக்கு வங்கியைக் கொண்டு இக்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என இல.கணேசன் நம்புகிறார்.
திமுக, அதிமுகவுக்கு இல.கணேசன் இடையூறாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications