மேனன்-இலங்கை தமிழ் எம்பிக்கள் நாளை சந்திப்பு
கொழும்பு: இந்திய அரசுடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக நான்கு எம்.பிக்கள் அடங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவினர் டெல்லி கிளம்பினர்.
இலங்கையில் தற்போதைய நிலவரம், பிரச்சினைக்கு தீர்வு, போர் நிறுத்தம், அப்பாவிகளைக் காப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இதை ஏற்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களிடையே இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. பெரும்பாலான எம்.பிக்கள் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கோரினர்.
இருப்பினும், சில எம்.பிக்கள் பேசிப் பார்க்கலாம் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சேனாதிராஜா, பிரேமசந்திரன், அடைகலநாதன், இரா.சம்பந்தன் ஆகிய நான்கு எம்.பிக்கள் இன்று டெல்லி கிளம்பினர்.
நாளை அவர்கள் நான்கு பேரும் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனனை சந்தித்துப் பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications