எனக்கே சீட் இல்லையென்றது அதிமுக-கார்த்திக்
சென்னை: நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.
கார்த்திக்கின் நிலை என்னவென்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அவரது கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், கார்த்திக் எங்கு போட்டியிடுகிறார் என்பதிலும் தெளிவு இல்லை.
அவ்வப்போது நெல்லைக்கும், மதுரைக்கும், தேனிக்கும் போய்க் கொண்டிருக்கிறார் கார்த்திக்.
இந் நிலையில் இன்று சென்னையில் உள்ள தேவி ஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் செய்தியாளர்களை அழைத்துப் பேசினார் கார்த்திக்.
அவர் கூறுகையில், அதிமுக கூட்டணியில் சேர எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் நான் போகவில்லை. ஏன் தெரியுமா?. நானும் ஒரு கட்சி ஆரம்பித்து தலைவனாக இருக்கிறேன். என்னை போட்டியிடக் கூடாது என்றால் எப்படி இருக்கும் எனக்கு?.
ஆதரவு மட்டும் கேட்கிறார்கள். அதனால்தான் நான் அதிமுக கூட்டணிக்கு போகவில்லை என்றார் கார்த்திக்.
விருதுநகரில் கார்த்தி்க் போட்டி?:
இதற்கிடையே கார்த்திக்கை விருதுநகரில் களமிறக்கிவிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கடி தர திமுக திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்தத் தொகுதியில் முக்குலத்தோரும் கணிசமான அளவி்ல் உள்ளனர். கார்த்திக்கும் இங்கு ஆதரவு அதிகம். முக்குலத்தோர் வாக்குகள் வைகோவுக்குப் போவதைத் தடுத்தால் தனது அணி வெல்ல முடியும் என திமுக கருதுகிறதாம்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications