அழகிரியுடன் பிரசாரத்துக்கு போனவருக்கு கத்திக்குத்து
மதுரை: மதுரையில் மு.க.அழகிரியுடன் பிரசாரத்திற்குப் போய் விட்டுத் திரும்பிய திமுக பேச்சாளர் கத்தியால் குத்தப்பட்டார்.
மதுரையி்ல் தீவிரப் பிரசாரத்தில் குதித்துள்ளார் திமுக வேட்பாளரான மு.க.அழகிரி.
நேற்று அவர் மதுரை நகரில் பிரசாரம் மேற்கொண்டார் அவருடன் திமுக நிர்வாகிகள், சேவியர் ராஜா உள்ளிட்ட திமுக பேச்சாளர்கள், பெரும் திரளான தொண்டர்கள் உடன் செனறனர்.
இரவு அண்ணாநகரில் பிரசாரத்தை முடித்த அழகிரி பின்னர் அழகப்பன் நகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.
சேவியராஜ், கே.கே.நகரில் உள்ள பால்பண்ணை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல் வ்நதது. அவர்கள் சேவியர் ராஜை முதுகில் கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சேவியர் ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாளை முதல் மோகன் பிரச்சாரம் துவக்கம்:
இந் நிலையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனின் பிரச்சாரத்தை அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் நாளை துவக்கி வைக்கிறார்.
நாளை அச்சம்பத்து, சம்பக்குடி, கிளாநேரி, புதுக் குளம், துவரிமான், இந்திரா காலனி, சேம்பர், நாடார் தெரு, கீழமாத்தூர், காமாட்சிபுரம், மேலமாத்தூர், கொடிமங்கலம், கொடிமங்கலம் , தாராபட்டி ஆகிய கிராமங்களில் மோகன் வாக்கு சேகரிக்கிறார்.
வாக்கு சேகரிப்பில் அதிமுக, மதிமுக, பாமக, சிபிஐ, போன்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications