சென்னிமலை-அடிப்படை வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அடிப்படை வசதிகள் கோரியும், நிலபட்டா கோரியும் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க பொது மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட மணிமலைகரடு பகுதியில் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக நிலப்பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், தங்களுக்கு நிலப்பட்டா கோரி அரசு அதிகாரிகள், எம்எல்ஏ, எம்.பி ஆகியோரிடம் பல முறை மனு கொடுத்தும் பயன் இல்லையாம்.
மேலும், நியாயவிலை கடை கட்டித்தரப்படவில்லை என்றும் பொது மக்கள் தரப்பில் புகார் தெரிவித்து வருகின்றனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க பொது மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் ஊர் முக்கியஸ்தர்கள் மூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடை பெற்ற ஊர்க் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
பொது மக்களின் இந்த முடிவை முறைப்படி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக தேர்தல் அதிகாரி ஆகியேருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications