10 ரூபாய் நோட்டில் பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல்

இந் நிலையில் மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்த தோவாளை பாஜக ஓன்றிய துணை தலைவரும், சோடா விற்பவருமான கிருஷ்ணன் ஒரு 10 ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு வந்தார்.
அலுவலகத்தில் இருந்த மாவட்ட பாஜக தலைவர் வேல்பாண்டியனிடம் அந்த நோட்டைக் கொடுத்தார். அதனை பார்த்த மாவட்ட தலைவர் வேல்பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த ரூபாய் நோட்டின் ஒரு பக்கம் வரும் 17ம் தேதி (இன்று) பாஜக அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்போம். பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்படுவார்கள் என்று எழுதப்பட்டு, இப்படிக்கு சரவணன், மாடசாமி, கமல் என்ற பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
மேலும் 9944979816 என்ற செல்போன் நம்பரும எழுதப்பட்டிருந்தது. ரூபாய் நோட்டின் மறுபக்கம் வினோத், சுபாஷ், ராதா, குமரேசன், பிரபு, கமல் என்ற பெயரும் எழுதப்பட்டு 9894631163 என்ற செல்போன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் எஸ்பியிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் உடனடியாக பாஜக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், மற்ற தலைவர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
கிருஷ்ணனின் கைக்கு இந்த நோட்டு எப்படி வந்தது என்று தெரியவில்லை.
ரூபாய் நோட்டில் எழுதப்பட்டிருந்த செல்போன் எண்கள் இரணியில் பகுதியை சேர்ந்த இரு பாஜக உறுப்பினர்களுடையது எனத் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் விசாரித்தனர்.
அப்போது, இந்த சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரூபாய் நோட்டிலுள்ள மற்ற பெயர்களும் எங்கள் உறவினர்களுடையதுதான். எனவே எங்களுக்கு வேண்டாதவர்கள் யாரோ தான் இதை செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு மிரட்டல் விடுத்தவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications