வன்னியில் தொடரும் ராணுவ தாக்குதல் - 2 நாட்களில் 350 பேர் படுகொலை
வன்னி: வன்னி பாதுகாப்பு வளையப் பகுதியில் தொடர்ந்து ராணுவம் கொலை வெறித் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று 169 பேரும், இன்று காலை முதல் இதுவரை 178 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை நடத்திய வெறித் தாக்குதல்களில் 178-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கொத்துக் குண்டுகளை வீசிக் கொலை ..
முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் கொத்துக்குண்டு, ஆர்ட்டில்லரி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
இன்று காலை 6 மணிவரை படையினர் நடத்திய தாக்குதல்களில் 178-க்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர்ந்து ராணுவம் வெறித்தனமாக தாக்கி வருவதாக கூறப்படுகிறது.
நேற்று 169 தமிழர்கள் பலி
புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 169 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 234 பேர் காயமடைந்தனர்.
சனிக்கிழமை காலை முதல் மாலை வரை இடைவிடாமல் தாக்குதல் நடந்துள்ளது.
வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகள் மீது படையினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்னர்.
காயமடைந்தவர்கள் மாத்தளன் மருத்துமனைக்கு கொண்டுசெல்ல முடியாதவாறு மருத்துவமனை வீதியில் தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.
கடும் சிரமத்தின் மத்தியில் காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை சிகிச்சை நிலையத்திலும் நட்டாங்கண்டல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருமளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் கொத்து வெடிகுண்டுகளை இலங்கைப் படைகள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications