12000 ஊழியர்களை நீக்க சத்யம் புதிய நிர்வாகம் முடிவு
ஹைதராபாத்: இரண்டு நாட்கள் சந்தோஷம் என்றால், நான்கு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டிய நிலையில் உள்ளனர் சத்யம் நிறுவன ஊழியர்கள்.
சத்யம் நிறுவனத்தின் புதிய உரிமையாளராக டெக் மஹிந்திரா வந்தவுடன் எல்லோரும் சந்தோஷப்பட்டனர். அதே நேரம் எப்போது வேலை நீக்க உத்தரவுகள் வருமோ என்ற சின்ன பயமும் உள்ளுக்குள் இருந்து வந்தது.
இப்போது அவர்கள் பயம் நிஜமாகும் அறிகுறி தெரிய ஆரம்பித்துள்ளது.
இன்னும் ஒரு மாத காலத்துக்குள் சிக்கன நடவடிக்கையாக பணியாளர்களைக் குறைக்கப் போவதாக சத்யம் நிறுவன சிஇஓ ஏஎஸ் மூர்த்தி அறிவித்துள்ளார்.
சத்யம் நிறுவனத்தில் 48000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 80 சதவிகிதம் சத்யம் கிளைகளிலும், 20 சதவிகிதம் ஆன் சைட் ஊழியர்களாகவும் உள்ளனர்.
இவர்களில் மொத்தம் 12 ஆயிரம் பணியாளர்களை நீக்க உத்தேசித்துள்ளது டெக் மஹிந்திரா. முக்கிய வாடிக்கையாளர்களை கவனிக்கும் பணியாளர்களை மட்டும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடலாம் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல இனி அனைத்துப் பணிகளையும் டெக் மஹிந்திரா பெயரில் செய்வதா அல்லது பழைய சத்யம் பெயரிலேயே தொடர்வதா என்பது குறித்தும் இந்த வாரம் முடிவு செய்யப் போவதாக டெக் மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். விரைவில் சத்யம் நிறுவனத்துக்கு புதிய சிஎப்ஓ வை நியமிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications