தலைமை செயலக கட்டிட பணி-முதல்வர் ஆய்வு
சென்னை: புதிய தலைமை செயலகத்தின் கட்டுமான பணிகளை முதல்வர் கருணாநிதி இன்று பார்வையிட்டு, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் விறுவிறுவென நடந்து வருகிறது. சுமார் 86 ஆயிரத்து 458 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.426 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கியது. வரும் நவம்பர் மாதத்துக்குள் முழு கட்டிடத்தை கட்டி முடிக்கவும், மீதமுள்ள இறுதி கட்டப்பணிகளை 2010ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்பின்னர் புதிய சட்டசபை அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்த புதிய கட்டிடத்தில் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி கட்டிட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவருடன் உள்துறை முதன்மை செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன், சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications