நளினியை விடுதலை செய்யக் கோரும் மனு - விசாரணைக்கு உகந்ததல்ல: சிபிஐ
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் என்கிற அறிவு, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் ரவி, ஜெயக்குமார், பயாஸ், நளினி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சின்னசாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அவர்கள் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஐ மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு தமிழக அர சு சார்பில் கூடுதல் உள்துறை செயலாளர் மணி நேற்று நீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தபிறகு, அந்த தீர்ப்பை விமர்சிக்க அனுமதிக்க முடியாது. தடா கோர்ட் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நளினி உள்பட 7 பேருக்கு தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டே சி.பி.ஐ. விசாரணையை பாராட்டியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புபடி சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இவர்களை விடுதலை செய்யும்படி ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்ய முடியாது. எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆகவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதேபோல சிபிஐ சார்பில், பல்நோக்கு கண்காணிப்பு குழு போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு தகுதி கிடையாது. சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருப்பதால் இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறானவை. இந்த வழக்கில் ஏற்கனவே சட்டத்தின்கீழ் உள்ள நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
மேலும், ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையை தொடர்ந்து, சி.பி.ஐ.யில் பல்நோக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. ஜெயின் கமிஷன் கூறிய கருத்துக்களை பல்வேறு கோணத்தில் இந்த குழு விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தண்டனை வழங்கி கூறப்பட்டு விட்டதால், இனி எந்த கோர்ட்டும் சட்ட நிவாரணம் பெறமுடியாது.
ஜெயின் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் குறித்து பல்நோக்கு கண்காணிப்பு குழு மேல்விசாரணை செய்து வருவதில் முன்னேற்றம் உள்ளது. இந்த விசாரணையை சென்னை தடா' நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
ரகசிய விசாரணையின்போது இந்த குழு அவ்வப்போது விவரங்களை தாக்கல் செய்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி கடைசியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தண்டனை வழங்கியுள்ளது என்று யூகத்தின் அடிப்படையில்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல. இவர்களை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்ய முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆகவே, கோர்ட்டு செலவை விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று இந்த மனு மீது நீதிபதிகள் தீர்ப்பளிக்கவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications