ஈழ தமிழர்களுக்கு ரூ. 6.5 கோடி நிவாரண பொருட்கள்
சென்னை: இலங்கையில் உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் வாடும் 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சுமார் ரூ. 6 கோடியே 46 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இந்த வார இறுதியில் அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு, முதற்கட்டமாக கடந்த ஆண்டி நவம்பர் 13ம் தேதி 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் ரூ. 10 கோடியே 6 லட்சம் மதிப்புடைய நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலமாக இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் அது செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு உதவுவதற்காக தற்போது இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 40 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவைப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, சமையல் பாத்திரங்கள், தட்டுகள், டம்ளர்கள் ஆகியவையும், அதோடு வேட்டிகள், சேலைகள், லுங்கிகள், நைட்டிகள், போர்வைகள், துண்டுகள் என ரூ. 6 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புடைய நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் பார்வையிட்டார்...
இந்த நிவாரணப் பொருட்களை முதல்வர் கருணாநிதி, கடந்த 20ம் தேதி தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டார். இவை அனைத்தும் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள கப்பலில் இந்த வார இறுதிக்குள் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்படும். பின்னர் வழக்கம் போல் செஞ்சிலுவைச் சங்கம் வழியாக தமிழர்களுக்கு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications