மது..மகன் சாவு-துயரத்தில் தந்தையும் சாவு
சென்னை: அதிக அளவில் மது அருந்திய மகன் கண் முன்பாக துடிதுடித்து இறந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தையும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சென்னை கோடம்பாக்கம் முத்து தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை. இவருக்கு 64 வயதாகிறது. சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம். இவருக்கு மனோகரன் (48) என்ற மகன் உள்ளார். மனோகரனின் மனைவி பாக்கியம்.
மனோகரன் மளிகைக் கடை வைத்திருந்தார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மனோகரனும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் குறைந்த விலையில் கிடைத்தது என்பதால் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியுள்ளனர்.
புது மெஷின் வாங்கிய குஷியில் பார்ட்டி வைத்துள்ளனர். மனோகரனும், அவரது நண்பர்களும் சேர்ந்து அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு போய் மது அருந்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மது அருந்தினர். இதில் மனோகரனுக்கு போதை அதிகமாகி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் மனோகரனை வீட்டுக்குக் கூட்டி வந்தனர்.
அங்கு சிறிது நேரத்தில் துடிதுடித்து மனோகரன் உயிரிழந்தார். இதைப் பார்த்து அவரது தந்தை அப்பாதுரை அதிர்ச்சி அடைந்தார்.
ஒரே மகன் இப்படி மதுவுக்கு பலியானதை நினைத்து அதிர்ச்சி அடைந்து புலம்பிய அவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு மரணங்களும் ஒரு மணி நேரத்தில் நடந்துவிட்டன.
மகன் மதுவுக்கும், தந்தை அதிர்ச்சியிலும் இறந்தது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications