ராஜபக்சேவின் சகோதரர் இந்தியா விரைகிறார்

இலங்கை ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் பலியாகி வரும் நிலையில், போர் நிறுத்ததுக்கு உலக நாடுகள் இலங்கையை நெருக்கி வரும் நிலையில் இவர் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது. அதிபர் ராஜபக்சேவின் சகோதரரான இவர் அமைச்சராகவும் உள்ளார்.
இது குறித்து அமைச்சர் யபா அபேவர்த்தனே கூறுகையில், இந்திய அதிகாரிகளுடன் பாசில் ராஜபக்சே பேச்சு நடத்துவார். தீவிரவாதம் விஷயத்தில் இந்தியா தனது நிலையில் உறுதியாக உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்போது கூட புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையலாம். அவ்வாறு செய்தால் அவர்கள் விரும்பிய இடத்துக்கு சென்றுவிடலாம் என்றார்.
போரை நிறுத்த முடியாது: ராஜபக்சே:
இதற்கிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனிடம், அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வன்னி நிலவரம் பெரும் துயரமாக மாறி வருகிறது. இது லண்டனில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றம் முன்பாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு பிரதமர் கார்டன் பிரவுன், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை ஏற்க முடியாது என்று கூறி ராஜபக்சே நிராகரித்து விட்டாராம்.
பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து 35 ஆயிரம் மக்கள் வெளியேறி வந்துள்ளார்கள். எனவே இந்த சமயத்தில், போர் நிறுத்தம் அவசியமற்றது என்று அவர் பிரவுனிடம் கூறியதாக அதிபர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications