இலங்கைக்கான இந்திய தூதர் டெல்லி விரைந்தார்!
டெல்லி: இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் திடீரென டெல்லி விரைந்துள்ளார். வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் படு மோசமாகி வருகிறது. பெருமளவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
போரை கிட்டத்தட்ட முடிக்கும் நிலைக்கு இலங்கை ராணுவம் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் புலிகள் வசம் உள்ள பகுதிகளில் பெருமளவிலான மக்கள் இன்னும் இருப்பதால் ராணுவ நடவடிக்கையால் அவர்களின் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் இன்று திடீரென டெல்லி விரைந்தார். டெல்லி வந்து சேர்ந்ததும் நேராக பிரணாப் முகர்ஜியை அவர் சந்தித்துப் பேசினார்.
அலோக் பிரசாத்தின் திடீர் வருகை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தூதுவராக அவரது தம்பி பசில் ராஜபக்சேவும் இன்று டெல்லி வருகிறார்.
இதனால் இலங்கை விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications