'பந்த்' விதிமீறல் அல்ல-நரேஷ் குப்தா
சென்னை: வேலை நிறுத்தத்தை தேர்தல் விதிமுறை மீறல் என்ற கோணத்தில் நாங்கள் பார்க்கவில்லை. இந்த வேலை நிறுத்தம் காரணமாக தேர்தல் பணிகள் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்வோம் என தமிழக தேர்தல் ஆணையாளர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நரேஷ் குப்தா கூறுகையில்,
இலங்கைக்கு உணவு பொருள்களை அனுப்புவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், உதவிப் பொருள்கள் அனுப்புவதை விளம்பரப்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அது மீறிப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உணவுப் பொருள்களை தமிழக அரசு அனுப்புவதாக தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் விளம்பரம் வெளியாகியுள்ளது. இது பற்றி மத்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகங்களுக்கு கட்டுப்பாடு...
அரசியல் கட்சிகள் அமைத்துள்ள தற்காலிக தேர்தல் அலுவலகங்களால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அதிகரித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் இந்த அலுவலகங்கள் அரசு நிலங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அப்படியிருந்தால் அது ஆக்ரமிப்பாக கருதப்படும்.
மேலும், இரு கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களுக்கிடையே குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்படக்கூடாது.
வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வாக்குச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தான் கட்சி அலுவலகங்கள் இருக்க வேண்டும். தேர்தல் அலுவலகத்தில் ஒரே ஒரு பேனர் மட்டும் தான் வைக்கப்பட வேண்டும். அதுவும் 4 அடிக்கு, 8 அடி என்ற அளவில் இருக்க வேண்டும்.
உறுதிமொழி கொடுக்க வேண்டும்...
அதுமட்டுமின்றி, தொகுதி தேர்தல் அதிகாரியிடம் முன்அனுமதி பெற்றே பின்னரே அலுவலகத்தை அமைக்க வேண்டும். அதற்காக மனு செய்வோர், ஒரு உறுதிமொழியை எழுதித் தரவேண்டும்.
அதில், தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளின்படியே அலுவலகம் அமைக்கப்படுகிறதென்றும், அங்கு பணம், பரிசுப் பொருள்கள் மற்றும் உணவு போன்றவற்றை இலவசமாக வினியோகிக்க மாட்டோம் என்றும், பாதையில் இடையூறாக அமைந்திருக்காது என்றும் குறிப்பிட வேண்டும்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, சாதனைகளை விளக்கி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கையேடுகளை வினியோகித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அது தவறை என்று சொல்ல முடியாது. அதற்கான செலவுகள், வேட்பாளர் செலவுக் கணக்கில், சேர்க்கப்படும்.
வாகன 'பாஸ்' வாங்க நாளை கடைசி நாள்...
வாகன 'பாஸ்' அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு 40ம், அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு 20ம் வழங்கப்படும். அதிமுக, தேமுதிக, சிபிஎம் போன்ற கட்சிகள் வாகன 'பாஸ்' வாங்கிவிட்டன. திமுக இதற்கு விண்ணப்பித்துள்ளது. காங்கிரஸ், பாமக, பாஜக, சிபிஐ, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. இதற்கு நாளை தான் கடைசி நாள்.
இன்று வேலைநிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதை தேர்தல் நடத்தை விதிமீறல் என்ற கோணத்தில் நாங்கள் யோசிக்கவில்லை. எனினும், தற்போது நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் பாதிக்காதபடி பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். தேர்தல் தொடர்பான பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றார் நரேஷ் குப்தா.
திமுக இலவசம் கொடுப்பதாக புகார்...
இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட நாட்றாம்பள்ளியில் திமுக எம்எல்ஏவின் உறவினர் வீட்டில் வைத்து இலவச டிவி, கேஸ் கொடுக்கப்பட்டு வருவதாக பாமக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
புகார் மனுவில்,
நாட்றம்பள்ளி ரெங்கசாமி தெருவில் உள்ள திமுக எம்எல்ஏ சூரியகுமாரின் உறவினர் வன்னியத்தேவன் வீட்டில், வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக இலவச கலர் டிவி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. பகல் நேரத்தில் திமுகவுக்கு பிரசாரம் செய்யும் அவர்கள் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கிறார்கள்.
இரவில் டோக்கனை கொடுத்து டிவி வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இது போல் இலவச கேஸ் அடுப்பும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு போலீசார் காவல் காத்து எங்களை அவரது வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தனர்.
போலீஸ் சொன்னபடி, நீதிமன்ற உத்தரவை பெற்று வந்த பிறகு, ஆய்வு செய்ததில் அந்த வீட்டில் டிவிக்களும், கியாஸ் அடுப்புகளும் இருந்தது தெரியவந்தது. அங்கிருந்து தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவிக்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் வாய்க்கரிசி பேச்சுக்கு எதிர்ப்பு...
கடந்த 18ம் தேதி திமுக கூட்டணி பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் கருணாநிதி அதிமுக அணிக்கு வாக்களித்தால் மக்கள் தங்களது வாய்க்கு அவர்களே வாய்க்கரிசி போடுவதற்கு சமம் என பேசியுள்ளார். இது, மாற்று அணிக்கு வாக்களிப்போர் பிணத்துக்கு சமம் என்று சொல்வது போல் உள்ளது. உணர்வுப்பூர்வமாக வாக்காளர்களை பாதிக்கக்கூடியது.
தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்கியுள்ள மாதிரி நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. எனவே, இம்மாதிரியான பேச்சுக்களை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications