மதுரை சித்திரை திருவிழா-முகூர்த்த கால்
அழகர்கோவில்: சித்திரை திருவிழாவின் துவக்கமாக கருதப்டும் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா இன்று காலை 7.45 மணிக்கு சிறப்பாக நடந்தது.
மதுரையை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலம். இதற்கான ஏற்பாடுகள் மதுரையில் ஜோராக நடந்து வருகிறது.
விழாவின் தொடக்கமாக மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இன்று காலை 7.45 மணிக்கு முகூர்த்த கால் நடும் விழா சிறப்பாக நடந்து, முடிந்தது. அதனை தொடர்ந்து கள்ளழகர் எழுந்தருளுவதற்காக பந்தல் போடும் பணி ஆரம்பாகியுள்ளது.
கள்ளழகர் (சுந்தரராஜ பெருமாள்) அழகர் கோவிலில் இருந்து வரும் 7ம் தேதி அழகர் கோவிலில் இருந்து கிளம்புகிறார்.
மறுநாள் 8ம் தேதி அவருக்கு எதிர்சேவை நடைபெறுகிறது. 9ம் தேதி காலை 7.30 மணிக்கு அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 10ம் தேதி தசாவதாரமும், 11ம தேதி பூப்பல்லக்கும், 12ம் தேதி அப்பன்திருப்பதியில் விழாவும், 13ம் தேதி மலைக்கு திரும்பும் விழாவும் நடக்கிறது.
அழகர்கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து முடிக்க உத்தரவு...
இந்நிலையில் அழகர் கோவிலுள்ள கள்ளழகர் திருக்கோவிலுக்கான கும்பாபிஷேக திருப்பணிகள் தற்போது ரூ. 5 கோடி செலவில் நடந்து வருகிறது. கோவிலில் உள்பிரகாரம் சுத்தப்படுத்தப்பட்டு, கல் சுவர்கல் மற்றும் கல் தூண்கள் பதிக்கப்பட்டுள்ளது.
சுவாமியின் மூலஸ்தானம், தங்க விமானம், மூலவர் சன்னதியின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள பழங்கால சுவாமி சிலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அவைகள் வண்ணங்கள் பூசப்பட்டு புது பொலிவுடன் ஜொலிக்கின்றன.
தொண்டைமான் கோபுரம், சொர்க்கவாசல் கோபுரம், பதினெட்டாம்படி ராஜகோபுரம் உள்ளிட்ட துணை கோவில்களின் மேல் பிரகாரங்களில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பணி வேலைகளை பார்வையிட மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் சுதர்சனம்கள்ளழகர் கோவில் வந்தார்.
அனைத்து வேலைகளையும் உற்று கவனித்த அவர் திருப்பணி வேலைகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். விரைவாக கும்பாபிஷேகம் விரைவாக நடத்தப்பட வேண்டும். அதற்காக பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை விரைவுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications