100 நாளில் நாட்டை நிமிர்த்தி விடுவேன்!-பிரதமர்
கௌஹாத்தி: மீண்டும் பிரதமரானால் 100 நாட்களில் இந்தியப் பொருளாதாரத்தை 'நிமிர்த்தி'விடுவதாகக் கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன்சிங்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் இதை அவர் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி:
சில மாதங்களுக்கு முன்பு தனது அரசு அறிவித்த நிதிச் சலுகைகளின் பலன்கள் வெகு அருகில் தெரியத் தொடங்கியுள்ளன.
பொருளாதாரம் மந்தத்திலிருந்து மீட்சிக்குத் திரும்பும் இந்த முக்கியமான காலகட்டத்தில் தேர்தல் வந்திருக்கிறது. மீண்டும் எனது தலைமையிலான அரசு வரும்போது, அடுத்த 100 நாட்களுக்குள் முழுமையான பலன்களை இந்தியப் பொருளாதாரம் உணரத் தொடங்கும்.
அதேபோல புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் நேரம் நெருங்கி வருகிறது. சிமெண்ட், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கட்டுமானத் துறையில் கணிசமான புதிய வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசின் இந்த பொருளாதாரச் சலுகைகளால் அடுத்த ஆண்டில் 9 முதல் 10 சதவிகிதம் வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னரிடம் இதுகுறித்து விரிவாக விவாதித்துள்ளேன். விரைந்த பொருளாதார வளர்ச்சிக்கான பல திட்டங்களை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.
கறுப்புப் பண விவகாரத்தைப் பொருத்தவரை, அதை மீண்டும் நமது பொருளாதாரத்துக்குத் திருப்பும் முயற்சியில் காங்கிரஸ் அரசும் உள்ளது. ஆனால் எந்தெந்த நாட்டில் கறுப்புப் பணம் உள்ளது என்ற விவரம் முழுமையாகத் தெரியாது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவது முழுமையான தகவல், ஆதாரம் இல்லாதது. நம்மோடு ஒத்த கருத்துடைய கட்சிகளோடு இதுகுறித்துப் பேசி வருகிறோம், என்றார் மன்மோகன் சிங்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications