பிரபாகரனை நெருங்குகிறது ராணுவம்-6 கி.மீட்டர் தூரமே பாக்கி!

விடுதலைப் புலிகளின் இருப்பிடத்தை மிகவும் குறுக்கி விட்ட ராணுவம் தற்போது 6 கிலோமீட்டர் பரப்பளவுக்குள் விடுதலைப் புலிகளை முடக்கியுள்ளனர்.
இருப்பினும் கூட பிரபாகரனைப் பிடிப்பது எளிதாக இல்லை. காரணம்,இன்னும் விடுதலைப் புலிகளின் வீரர்கள் தொடர்ந்து ராணுவத்திற்கு கடும் பதிலடி கொடுத்துக் கொண்டிருப்பதால்.
தற்போது 6 கிலோமீட்டர் தூரத்தில் பிரபாகரன் இருப்பதாக ராணுவம் கூறுகிறது. அந்தப் பகுதியை நோக்கி நாலாபுறமும் ராணுவம் மிக மிக மெதுவாக முன்னேறி வருகிறது.
இதுகுறித்து 58வது பிரிவு கமாண்டர் சாவேந்திர டிசில்வா கூறுகையில், அப்பகுதியில் பெருமளவில் அப்பாவி மக்கள் உள்ளனர். எனவே வேகமாக முன்னேறினால் அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே மிக மிக மெதுவாக முன்னேறி வருகிறோம்.
விடுதலைப் புலிகளை மிகக் குறுகிய இடத்தில் முடக்கி விட்டாலும் கூட, அவர்கள் இன்னும் கடும் எதிர்ப்புடன் போராடி வருகின்றனர். அதேசமயம், பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதற்கு உறுதியான அறிகுறி எதுவும் இல்லை.
ஆனாலும், தற்போது நாங்களை முற்றுகையிட்டுள்ள இடத்துக்குள்தான் பிரபாகரன் இருக்க முடியும். அவர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்லவும் வழி உண்டு.
போரின் கடைசிக் கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே பொறுமையாகவும், நிதானமாகவும் கடைசிப் போரை வெல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications