சேலத்தில் உண்ணாவிரதம் இருந்த தங்கபாலு
சேலம்: சென்னையில் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் தொடங்கியதை அறிந்தவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் சேலத்தில் திமுகவினருடன் இணைந்து உண்ணாவிரதம் இருந்தார். தமிழகம் முழுவதும் திமுகவினருடன் இணைந்து காங்கிரஸாரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அவர் கூறுகையில், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்துடன் இணைந்து நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன்.
அதேபோல சென்னையில் கலைஞர் கருணாநிதியுடன் இணைந்து காங்கிரஸாரும், நிர்வாகிகளும், மாநிலத்தின் பிற மாவட்டங்களில் தி்முகவினருடன் இணைந்து காங்கிரஸாரும் உண்ணாவிரதம் இருக்குமாரு கேட்டுக் கொள்கிறேன்
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் காக்கப்பட வேண்டும். அங்கு முழுமையான போர் நிறுத்தம் மிக மிக அவசியம். இந்த விஷயத்தில் திமுகவும், காங்கிரஸும் ஒரே நிலையை எடுத்துள்ளன.
அன்னை சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டு முழுமையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications