வெளிநாட்டு பணியாளர்-திரும்ப அழைக்கும் டிசிஎஸ்!
மும்பை: சிக்கனம் கருதி வெளிநாட்டில் இருக்கும் தங்களது ஊழியர்களை டிசிஎஸ் இந்தியாவுக்கே திரும்ப அழைக்க போவதாக அறிவித்துள்ளது டிசிஎஸ்.
பொருளாதார நெருக்கடி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆட்டிபடைத்து வருகிறது. சிக்கன நடவடிக்கையாக உலகின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் பெருமளவு ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
இந்நிலையில் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேலை பார்க்கும் தங்களது ஊழியர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் கூறுகையில்,
நாங்கள் இந்தியாவில் வைத்தே வெளிநாட்டு வேலைகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் ஆன்சைட் பணியாளர்களுக்காகும் தேவையில்லாத பண விரயத்தை தடுக்க முடியும். இதனால் வெளிநாட்டு இருக்கும் வேலைகளை முடக்குவதாகவோ, மூடுவதாகவோ யாரும் நினைக்க வேண்டாம்.
இதற்கு முன்னோட்டமாக கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை சில வெளிநாட்டு ஊழியர்களை இந்தியாவுக்கு வரவழைத்தோம். இதன்மூலம் மட்டும் நிறுவனத்துக்கு ரூ. 121 கோடி லாபம் கிடைத்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை தொடர இருக்கிறோம்.
விரைவில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்களை திரும்ப அழைக்க இருக்கிறோம்.
முன்னதாக இந்தியாவில் 24,855 பேரை வேலைக்கு எடுத்துள்ளோம். அமெரிக்காவில் புது முகங்களாக 250 பேரையும், சீனாவில் ஒரு சிலருக்கும் பணி உத்தரவு வழங்கியுள்ளோம்.
சத்யம் ஊழியர்களுக்கும் வாய்ப்பு!
அதேநேரம் ஊழியர்கள் யாரையும் நீக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை. ஆனால் இம்முறை ஊழியர்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்க முடியாது. சத்யம் நிறுவன ஊழியர்களை வேலைக்கு சேர்ப்பதில்லை என முடிவு செய்திருந்தோம். ஆனால் தற்போது அந்த முடிவில் மாற்றம் செய்துள்ளோம். விண்ணப்பங்களை பரிசீலிக்க முடிவெடுத்துள்ளோம்.
சரிவர வேலை பார்க்காத ஊழியர்களை ஆண்டுக்கு இரு முறை நீக்குவது வழக்கம். இது தொடரும் என்றார் சந்திரசேகரன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications