கனரக ஆயுத பயன்பாடு: வாக்குறுதியை இலங்கை கடைப்பிடிக்க வேண்டும்-ஐ.நா. கண்டிப்பு

Subscribe to Oneindia Tamil

UN flag
கொழும்பு: தமிழர்கள் சிக்கியுள்ள பகுதிகளி்ல் போர் விமானங்கள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று அளித்துள்ள வாக்குறுதியை இலங்கை அரசும், படைகளும் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா. கூறியுள்ளது.

ஐ.நா. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலாளர் ஜான் ஹோம்ஸ் இதை இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக கொழும்பு வந்துள்ளார் ஜான் ஹோம்ஸ். கொழும்பில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற இலங்கை அரசின் அறிவிப்பு கடந்த காலங்களைப் போலல்லாமல் உண்மையாகவே மதிக்கப்படும் என நான் நம்புகிறேன்.

தான் கூறியதை அரசும், ராணுவமும் மதித்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

நேற்று வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமாவை சந்தித்துப் பேசிய ஹோம்ஸ் பின்னர் வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள் முகாம்களை பார்வையிட்டார்.

பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பிய அவர் அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது ஐ.நா. மனிதாபிமானக் குழுவை அனுமதிப்பது தொடர்பாக இலஙகை அரசுடன் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்றார் ஹோம்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+