திண்டிவனம்-பஸ் கவிழ்ந்து 3 பேர் பலி-25 பேர் காயம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூன்று பேர் பலியாயினர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு சரக்கு லாரி ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திண்டிவனம் அருகே நெடிமேலி என்ற இடத்தில் சென்ற போது ஒரு மாருதி வேன் அதனை முந்தி செல்ல முயன்றது.
வேனுக்கு வழிவிடும் வகையில் லாரி டிரைவர் வண்டியை இடது புறமாக செலுத்த முயன்றார். ஆனால், லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. அப்போது எதிரே வந்த பஸ் மீது லாரி மோத முயன்றது.
லாரியுடன் மோதி விபத்து நடந்துவிடுமோ என அஞ்சிய பஸ் டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதையடுத்து பஸ் அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.
இதில் பரமேஸ்வரி (20), ரங்கநாயகி (45), ஆறுமுகம் (60) ஆகிய 3 பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாமாக உயிரிழந்தார்கள். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications