ராஜஸ்தான்: விழுந்து நொறுங்கிய சுகோய்-30, விமானி பலி

இந்தியாவின் அதி நவீன போர் விமானங்களில் சுகோய் 30எம்கேஐ ரக விமானமும் ஒன்று. இந்த விமானங்களை ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கடந்த 1997ல் இந்த விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன.
இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நகரில் இருந்து பயிற்சிக்காக கிளம்பிய ஒரு சுகோய் விமானம் அங்கிருந்து சுமார் 70 கிமீ தூரத்தில் உள்ள ராஜ்மதாய் எனும் கிராமத்தில் விழுந்த நொறுங்கியது.
விமானம் விபத்தில் சிக்கப்போவதை அறிந்த விமானிகள் விங் கமாண்டர் எஸ்வி முன்சே மற்றும் விங் கமாண்டர் பிஎஸ் நராங் ஆகியோர் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தனர். அப்போது விமானி பிஎஸ் நராங் பலத்த காயமடைந்து மரணமடைந்தார். முன்சே தப்பிவிட்டார்.
சுகோய் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாவது இதுவே முதல் முறை. இந்த வகையைச் சேர்ந்த ஒரு விமானத்தின் மதிப்பு சுமார் ரூ. 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய விமான படையை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் என் என் ஜோஷி கூறுகையி்ல், காலையில் 10.20 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. விமானம் புனே விமானப் படை மையத்தை சேர்ந்தது. இன்று ராஜஸ்தானில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விபத்து குறித்து இந்திய விமான படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications