தேர்தல்-'குடி'மகன்கள் கொண்டாட்டம்
நெல்லை: தேர்தல் பிரசாரம், கொளுத்தும் வெயில் போன்ற காரணங்களால் இம்மாதம் நெல்லை மாவட்டத்தில் சரக்கு விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு மே 13ம் தேதி நடக்கிறது. வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காலை, மதியம், மாலை, இரவு என அனைத்து வேளைகளிலும் பிரசாரம் களை கட்டி வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் டீ குடித்துவிட்டு நாள் முழுவதும் உற்சாகமாக வேலை பார்ப்பது அந்த காலம் என்றாகிவிட்டது. தற்போது தேர்தல் பிரசாரம் வரும் தொண்டர்களுக்கு சோம பானம் தேவைப்படுகிறது.
சோம பானம் இருந்தால் மட்டுமே தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கிறது என்பதால் வேட்பாளர்களும், தொண்டர்களுக்கு சரக்குகளை வாங்கி குவித்து வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் சரக்கு சரக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. நெல்லையில் இம்மாதம் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற சோம பான சரக்குகளின் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட 16 ஆயிரம் பெட்டிகள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக பீர் விற்பனைதான் கொடி கட்டி பறக்கிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் பீர் விற்பனை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட 11 ஆயிரம் பெட்டிகள் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து டாஸ்மக் அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் சமயம் என்பதாலும், வெயில் காலம் என்பதாலும் சரக்கு விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் சரக்குகளுக்கு ஆர்டர் கொடுத்து ஸ்டாக் வைத்துள்ளோம்.
விற்பனை அதிகரித்துள்ளதற்கு தகுந்தவாறு போதிய சரக்குகள் டாஸ்மக் கடைகளில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications