பாஸ்போர்ட் அதிகாரி சுமதிக்கு 3 நாள் சிபிஐ காவல்

சென்னை மண்டல பாஸ்போர்ட அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது கணவர் டாக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தத்கல் பாஸ்போர்ட் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் அதிகாரி சுமதி மீது விதிமுறைக்கு புறம்பாக பாஸ்போர்ட் வழங்கியதாக இரண்டாவது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உதவிய டிராவல் ஏஜென்சியை சேர்ந்த பாத்திமா, முஸாபர், சுமதியின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சுமதி, தானும், தனது கணவரும் கைது செய்யப்பட்டதால். தனது குடும்பத்தினர் கஷ்டப்பட்டு வருவதாகவும், அதனால் ஜாமீன் வழங்குமாறு கடந்த 25ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் மனு செய்தார். இவரோடு சேர்ந்து மற்ற மூவரும் மனு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாத்திமாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கியது. மற்ற மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் சுமதியின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 50 கோடி மதிப்பிலான நகைகள், பணம், சொத்துப் பத்திரங்களைக் கைப்பற்றினர். இதையடுத்து அவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது.
சிபிஐ காவல் வேண்டாம்...
இந்நிலையில் இது தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது சுமதி ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேரும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது தன்னை சிபிஐ காவலில் வைக்க வேண்டாம் என கூறி மனு ஒன்றை நீதிபதியிடம் கொடுத்தார் சுமதி.
அதில், சிபிஐ அதிகாரிகள் என்னை கைது செய்தபோதே விசாரணை நடத்தி முடித்துவிட்டனர். இனி விசாரிக்க எதுவும் இல்லை. சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டால் என்னை துன்புறுத்துவார்கள். எனவே நான் சிபிஐ காவலில் செல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்..
இவரை தொடர்ந்து டாக்டர் ரவிச்சந்திரனும், முஸாபரும் சிபிஐ காவலுக்கு அனுமதிக்க கூடாது என் மனு செய்தனர்.
சிபிஐ வக்கீல் கூறுகையில், சிபிஐ அதிகாரிகள் அவர்கள் மூவரிடமும் விசாரிக்க வேண்டியவை நிறைய உள்ளன. அவர்களை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில், அவர்கள் மூவரையும் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம். பின்னர் மூவரையும் சிபிஐ அதிகாரிகள் வரும் மே 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
தொடர்பான செய்திகள்:
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications