முதலீட்டாளர் காட்டில் மழை: ஏப்ரலில் மட்டும் ரூ.5 லட்சம் கோடி!

இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மொத்த நிறுவனங்களின் முதலீட்டின் மீது ஏப்ரல் மாதம் மட்டும் கிடைத்த லாபம் ரூ.35, 86, 977.91 கோடி. இதுவே மார்ச் மாதம் ரூ. 30,56,075.17 லட்சம் கோடிதான்.
ஆக ரூ.5 லட்சம் கோடி கூடுதல் லாபம்.
இதற்குக் காரணம், உலகப் பொருளாதாரம் குறித்த பாஸிடிவ் கருத்துக்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் பரவியதுதான்.
மார்ச் வரை 9700 புள்ளிகளைத் தாண்ட தடுமாறிக் கொண்டிருந்த சென்செக்ஸ், இந்த பாஸிட்டிவ் அணுகுமுறை காரணமாகவே 11400 புள்ளிகளைத் தாண்டியது.
இந்த ஒரு மாதத்தில் கிடைத்த ரூ.5 லட்சம் கோடி லாபத்தில் பெரும்பான்மை பகுதி புளூசிப் நிறுவனங்கள் எனப்படும் பெரிய நிறுவனப் பங்குகளால் கிடைத்தவையே.
இதில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.2.83 லட்சம் கோடி லாபமாகக் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்து பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு ரூ.1.85 கோடி லாபம் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications