டைம் டாப் 100 விஐபிக்கள் பட்டியலில் ரஹ்மான், நந்தன் நிலேகனி!
நியூயார்க்: புகழ்பெற்ற டைம் பத்திரிகையின் உலகின் 100 முன்னணி விஐபிக்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் இந்தியாவின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
டைம் பத்திரிகையின் டாப் 100 உலக பிரமுகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரிவினர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கெல், அமேசான்.காம் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ், ஓப்ரா வின்ப்ரே உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இரண்டு விஜபிக்களின் பெயர் இந்தப் பட்டியலில் உள்ளது. ஒருவர், சமீபத்தில் இரட்டை ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். மற்றவர் இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி. ஒவ்வொரு விஐபியைப் பற்றியும் வேறு ஒரு விஐபி தெரிவித்துள்ள கருத்துக்களையே அறிமுகமாகக் கொடுத்துள்ளது டைம்.
இதில், 'இந்தத் தலைமுறைக்கான இசையைக் கொடுத்தவர் ஏஆர் ரஹ்மான்' எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகையும் சல்மான் ருஷ்டியின் முன்னாள் காதலியுமான பத்மா லட்சுமி.
'நிலேகனி வெறும் கார்ப்பரேட் மட்டுமல்ல, இந்தியாவின் சர்வதேசத் தூதுவரும் கூட' என அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் க்யூ அண்ட் ஏ என்ற நாவலை எழுதிய விக்ரம் ஸ்வரூப்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications