Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திசைமாறிய படகு-நடுக் கடலில் பட்டியினால் பலியான 10 ஈழ அகதிகள்

Subscribe to Oneindia Tamil

Tamil Refugees
காகினாடா: இலங்கையில் போர் பகுதியில் இருந்து உயிர் தப்பிக்க ராமேஸ்வரம் வந்த அகதிகளின் படகு நடுகடலில் திசைமாறியதால் உணவு, குடிநீர் இன்றி பட்டினியால் பரிதவித்து 10 தமிழர்கள் பலியாகியுள்ளனர்.

இலங்கை ராணுவத்தால் ஈழப் பகுதியில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் உயிருக்கு பயந்து வெளி நாடுகளுக்கு தப்பிவிடுவது வழக்கம். தமிழநாட்டிலும் ஏரளாமான தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் 21 தமிழர்கள், முல்லைத்தீவு பகுதியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வருவதற்காக படகு ஒன்றில் கிளம்பியுள்ளனர். அவர்களுக்கு படகில் வந்த ஒருவர் வழிகாட்டுவதாக கூறியுள்ளார்.

ஆனால், நடுக்கடலில் படகு வழி தவறி தமிழகத்தில் இருந்து விலகி ஆந்திரா நோக்கி சென்றுள்ளது. ராமேஸ்வரம் அருகில் இருப்பதால் உணவு, பொருட்கள் தண்ணீர் எதுவும் கொண்டு வராத மக்கள் பசியில் தவித்துள்ளனர். குடிக்க தண்ணீர் கிடைக்காமல் வாடியுள்ளனர்.

தொடர்ந்து பயணம் செய்த நிலையில் கரையை காண முடியாமல் அவர்கள் தவித்துள்ளனர். இந்நிலையில் படகில் இருந்தவர்களில் ஒருவர் பின் ஒருவராக பட்டினியில் இறந்துள்ளனர். மொத்தம் வந்த 21 பேரில் 10 பேர் இறந்துவிட்டனர். மீதி 11 பேர் நேற்று ஆந்திராவின் காகினாடா பகுதியில் உள்ள உப்படாவில் வந்திறங்கினர்.

வெயிலில் கடலில் பயணம் செய்ததாலும், தண்ணீர் சரியாக குடிக்காத காரணத்தாலும், கரைசேர்ந்த அந்த 11 பேருக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கிழக்கு கோதவரி மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ண திரிவேதி கூறுகையில், அவர்கள் விரைவில் ராமேஸ்வரம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.

உயிர் பிழைத்த மேரி ஜோசப் பென்னி என்ற பெண் கூறுகையில், எனது குடும்பத்துடன் வந்தேன். வரும் வழியில் என் கணவர், இரண்டு மகன்கள், ஒரு மகள் என நான்கு பேரும் பசியால் துடிதுடித்து இறந்துவிட்டனர் என கதறியபடி கூறியது அருகில் இருந்தவர்களின் கண்களையும் ஈரமாக்கிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+