இலங்கைக்கு ஐஎம்எப் நிதியை நிறுத்த பிரான்ஸ்-பிரிட்டன் முயற்சி

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தன்னைச் சந்தித்த பிரிட்டன், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களிடம் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய கூறுகையில்,
இலங்கை பிரச்சனையை பல நாடுகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. 30 ஆண்டு போராட்டத்துக்கு பின் இப்போது தான் புலிகளையும் பிரபாகரனையும் ஒழிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே பிரபாகரனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கும் வரை தாக்குதலை நிறுத்த மாட்டோம். இப்போது போர் நிறுத்தம் செய்தால், அது புலிகள் மீண்டும் பலம் பெற மட்டுமே உதவும், மேலும் பிரபாகரன் தப்பிச் செல்லவும் உதவும் என்று கூறிவிட்டார்.
போர் நிறுத்தம் செய்ய இலங்கை ஒப்புக் கொள்ளாததையடுத்து சர்வதேச நிதியமான ஐஎம்எப் மூலம் இலங்கைக்கு அளிக்கப்படவிருந்த ரூ. 9,500 கோடி நிதியை தாமதப்படுத்துமாறு பிரிட்டனும் பிரான்சும் கோரியுள்ளன.
மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிட்டனுடன் பிரிட்டன், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களான மி்ல்லிபேண்டும் பெர்னார்டும் தொலைபேசியில் தங்களது இலங்கை பயணம் குறித்தும் விளக்கினர்.
கடந்த ஆண்டு இலங்கை சுமார் ரூ. 7,500 கோடியை ஆயுதங்கள் வாங்க செலவிட்டது, இந்த ஆண்டும் ரூ. 7,100 கோடியை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications