பொய்களால் தேர்தலை வெல்ல நினைக்கிறது பாஜக: பிரதமர்
ஜலாலாபாத் (பஞ்சாப்): இல்லாத பிரச்சினைகளையெல்லாம் கிளப்பி, பொய்களால் தேர்தலை வெல்ல முயலுகிறது பாஜக என்று கடுமையாக கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
பஞ்சாப் மாவட்டம் பெரோஸ்பூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஜலாலாபாத் என்ற இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பாஜகவை பிடி பிடியென பிடித்தார். அவர் பேசுகையில், பொய்யான புகார்களைக் கூறி, பொய்யான பிரச்சினைகளை பெரிதுபடுத்தி, பொய்களால் தேர்தலை வெல்ல நினைக்கிறது பாஜக.
விவசாயிகள் குறித்த பிரச்சினையிலும் கூட அது பொய்களைப் பேசி வருகிறது.
கோதுமைக்கும், அரிசிக்கும் அதிக கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தது காங்கிரஸ் அரசுதான். உரங்களின் விலையைக் குறைத்து காங்கிரஸ் அரசுதான். விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததும் காங்கிரஸ்தான்.
ஆனால் எந்தக் குறையையும் காண முடியாததால், புதிது புதிதாக பிரச்சினைகளைத் தேடிக் கொண்டிருக்கிறது பாஜக. தினசரி ஒரு புதுப் பிரச்சினையைக் கிளப்பி அதை பெரிதாக்க முயலுகிறார்கள். பிரச்சினைகளின் அடிப்படையில் இல்லாமல், பொய்களின் அடிப்படையில் தேர்தலை வெல்ல நினைக்கிறது பாஜக.
இலக்கே இல்லாமல்க காங்கிரஸ் மீது சரமாரியாக புகார்களைக் கூறி வருகிறது பாஜக.
பஞ்சாபில் பாஜகவும், சிரோன்மணி அகாலிதளமும் வெறும் சத்தம் மட்டுமே எழுப்பி வருகின்றன. காரியத்தில் எதுவும் இல்லை. சொல்வதை அவர்கள் செய்வதில்லை. கடந்த ஆறு ஆண்டு கால பாஜக-அகாலிதள ஆட்சியில் மக்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள். ஒன்றுமே செய்யவில்லை. மாறாக வேடிக்கை தான் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான் இவர்களைப் போல இல்லாமல், முற்போக்காக சிந்திக்க விரும்புகிறேன். நம் முன் பல புதுப் பாதைகள் உள்ளன. நமது விவசாயப் புரட்சிக்கு நாம் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்











Click it and Unblock the Notifications