என்னையும், ராமதாஸையும் தாக்க சதித் திட்டம் - அன்புமணி புகார்

பா.ம.க.வின் தேர்தல் இணைய தளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அன்புமணி இதைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. இன்றைக்கு தேர்தல் நடந்தால் 36 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். 13-ந்தேதி தேர்தல் நடக்கும் போது 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி கைப்பற்றும்.
கருணாநிதி முதலில் 40 தொகுதிகளும் கிடைக்கும். பின்னர் 30 என்றால், இப்போது 25 என்கிறார்.
தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வில்லை.
இலங்கையில் பாதுகாப்பு பகுதியிலும், தொடர்ந்து சிங்கள ராணுவம் குண்டு வீசி வருகிறது. அங்கு போர் நிறுத்தம் நடைபெறவில்லை. ஆனால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கபட நாடகம் ஆடுகிறார்கள்.
தேர்தல் பயத்தால் பஸ் கட்டணத்தை குறைத்தார்கள். இப்போது என்னையும், டாக்டர் ராமதாசையும் தாக்கி பேசி வருகிறார்கள். பல இடங்களில் அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது.
வேலூரில் பணம் பட்டுவாடா செய்ததை நாங்களே பிடித்துக் கொடுத்தோம். ஆனால் எங்கள் கட்சிக்காரர்கள் மீது வழக்குப்போட்டுள்ளார்கள்.
தேர்தலில் எப்படியாவது பா.ம.க.வை தோற்கடித்தே தீர வேண்டும் என்று சூழ்ச்சி செய்து சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் பொதுமக்கள் ஓட்டு போட முடியாதபடி வன்முறையை தூண்ட வெளியூர் ஆட்களை கொண்டு வந்து குவித்துள்ளனர்.
மேலும் எங்களை பிரசாரங்களில் கடுமையாக தாக்கிப் பேசி வருவோர், உடல் ரீதியாகவும், என்னையும், டாக்டர் ராமதாஸையும் தாக்க சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதுகுறித்து கட்சித் தலைவர்களுடனும், நிர்வாகிகளுடனும் ஆலோசித்து வருகிறோம். தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்வோம் என்றார் அன்புமணி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications