Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலுக்குப் பின்னர் இடதுசாரிகளுடன் கூட்டணிக்குத் தயார் - பிரதமர்

Subscribe to Oneindia Tamil

Manmohan singh
டெல்லி: தேர்தலுக்குப் பின்னர் இடதுசாரிகளுடன் கூட்டணிக்கு அமைக்க நான் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் அதிரடியாக கூறியுள்ளார்.

அதேசமயம், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சிஎன்என் -ஐபிஎன் தொலைக்காட்சிக்கு பிரதமர் அளித்துள்ள பேட்டி...

சிஎன்என்: அடுத்த ஆட்சியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?

மன்மோகன் சிங்: நிச்சயம் மத்தியில் அடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது.

சி.என்.என்.: உங்களுக்கு போதிய எம்.பிக்கள் ஆதரவு இல்லாவிட்டால் இடதுசாரிகளை அணுகுவீர்களா?

மன்மோகன் சிங்: அரசியல் என்பது சாத்தியங்களின் கலை. தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியான பின்னர்தான் நாங்கள் யாரை அணுகுவோம், எப்படி அணுகுவோம் என்பதை கூற முடியும்.

இதற்கு முன்பு நாங்கள் இடதுசாரிகளுடன் நான்கு ஆண்டு காலம் கூட்டணி அமைத்திருந்தோம். இடதுசாரிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம். எனக்கு நிறைய நண்பர்கள் அங்கு உள்ளனர். புத்ததேவ் பட்டசார்ஜி எனது நல்ல நண்பர் என நினைக்கிறேன்.

சி.என்.என்.: அரசியல் சாத்தியங்களின் கலை என்கிறீர்கள். ஒரு வேளை இடதுசாரிகளின் ஆதரவு கிடைத்தால் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை கைவிட முன்வருவீர்களா?

மன்மோகன் சிங்: எந்த ஒப்பந்தத்தையும் கைவிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படிப்பட்ட சூழல் வராது. ஆனால் மிகக் கடுமையான உழைப்புக்குப் பின்னர் ஏற்பட்ட அந்த ஒப்பந்தம், நமது அணுத் தனிமைக்கு முடிவு கட்ட உதவிய அந்த ஒப்பந்தம் வேண்டாம் என்று எந்த தேசபக்தி உள்ள இந்தியரும் கூற மாட்டார்.

நாம் பெரும்பாடுபட்ட பெற்றுள்ள உரிமை அது. எனவே அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நாட்டு நலனில் அக்கறை உள்ள எந்தக் கட்சியும் கோராது என நினைக்கிறேன்.

சி.என்.என்.: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது. ஆனால் இந்தியர்கள் அதன் பலனை இன்னும் அடையவில்லை. எனவே இதற்காக இடதுசாரிகளை இழப்பது சரி என நினைக்கிறீர்களா..?

மன்மோகன் சிங்: நிச்சயம் அணு சக்தி ஒப்பந்தம் நல்லதுதான். இன்னும் நிறைய நடைமுறைகளை நாம் கடக்க வேண்டியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், சர்வதேச அணு சக்தி ஏஜென்சி, என்.எஸ்.ஜி. என நிறைய உள்ளன. அவை முடிய வேண்டும். அதன் பிறகுதான் நமக்கு ரிசல்ட் கிடைக்கும். ஏற்கனவே ஆயிரக்கணக்கான வாட் மின்சாரம், யுரேனியத்தைத் தர பல நாடுகள் முன்வந்துள்ளன.

சி.என்.என்.: உங்களது கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் போதிய எம்.பிக்களைப் பெறத் தவறினால், ஜெயலலிதா, நிதீஷ் குமார் போன்றோரை அணுகுவீர்களா..?

மன்மோகன் சிங்: பாலம் குறுக்கிடும்போது அதை கடக்க முயற்சிப்போம். இப்போது நிலைமை தெளிவாக இல்லை.

சி.என்.என்.: ஒரு பிரதமராக, பாகிஸ்தானுடன் நல்ல நட்பை மேற்கொள்ள கடுமையாக முயன்றுள்ளீர்கள். இருப்பினும் அது இன்னும் கூட முடியவில்லை..

மன்மோகன் சிங்: இந்தியாவின் நலனை முன்னிட்டு பாகிஸ்தானுடன் வலுவான அமைதியான சூழ்நிலையை உருவாக்கவே நான் ஆரம்பம் முதல் பாடுபட்டு வருகிறேன். அந்த அடிப்படையில்தான் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். அணு ஆயுதத் தடை தொடர்பாக நானும், முஷாரப்பும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை மேம்பட்டது. ஆனால் அப்போது முஷாரப்புக்கு பல பிரச்சினைகள் உள்ளூரில் ஏற்பட்டதால் அது சாத்தியமாகாமல் போய் விட்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக நம்மிடம் எந்த துவேஷமும் இல்லை. நமது ஒரே கவலை. பாகிஸ்தான் நம்முடன் ஒத்துழைக்க வேண்டும். தனது மண்ணை தீவிரவாத செயல்களுக்கு அது பயன்படுத்தக் கூடாது என்பது மட்டுமே.

சி.என்.என்.: பிரதமராக உங்களது முதல் பதவிக்காலத்தில் செய்ய முடியாமல் போனது என்று ஏதாவது இருக்கிறது.. அதை அடுத்த பதவிக்காலத்தில் செய்ய விரும்புகிறீர்களா..?

மனமோகன் சிங்: எனது அடுத்த பதவிக்காலத்தில் விவசாயம், கல்வி, ஊரக சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

சி.என்.என்.: நாம் தான் அடுத்த பிரதமர் என்று முதன் முதலில் உங்களுக்குத் தெரிய வந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்..

மன்மோகன் சிங்: என்னைப் பிரதமராக்க முடிவு செய்து அதை 48 மணி நேரத்திற்கு முன்பு என்னிடம் கூறினார் சோனியா காந்தி. ஆனால் அதை நான் எதிர்த்தேன். சோனியாவை சமாதானப்படுத்த முயற்சித்தேன்.

நீங்கள்தான் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தகுதியான நபர். எனக்கென்று எந்த மக்கள் கூட்டமும் கிடையாது. எனக்கென்று ஒரு எல்லை உள்ளது என்றேன்.

ஆனால் அவரோ, நீங்கள்தான் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று உறுதியாக கூறி விட்டார்.

சி.என்.என்.: மீண்டும் நீங்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் முழுப் பதவிக்காலத்தையும் கழிப்பீர்களா அல்லது ராகுல் காந்தி போன்ற யாரிடமாவது இடையி்ல் பதவியைக் கொடுத்து விடுவீர்களா..?

மன்மோகன் சிங்: பிரதமராகக் கூடிய அனைத்து தகுதிகளும் ராகுல் காந்தியிடம் உள்ளன. நிச்சயமாக, ஒரு கட்டத்தில், என்னை விட இளைய வயதினரிடம் பதவியைக் கொடுக்கவே நான் விரும்புகிறேன் என்றார் மன்மோகன் சிங்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+