சொத்து: பழனிசாமிக்கு அதிகம் -ஆரூணுக்கு குறைவு
மதுரை: கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் இந்த முறை போட்டியிடும் கே.சி.பழனிசாமியின் சொத்து சுமார் ரூ. 23 கோடி அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜே.எம்.ஆருணின் சொத்து சுமார் ரூ. 1 கோடியை 21 லட்சம் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு மக்களவை தொகுதியும் உள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களில் இந்த முறை சுமார் 25 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கரூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, கடந்த முறை தனக்கு ரூ. 52 கோடியே 87 லட்சம் சொத்து இருப்பதாக கணக்கு காட்டினார். ஆனால், இம்முறை ரூ. 75 கோடியே 53 லட்சத்து 74 ஆயிரம் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
அதாவது இந்த ஐந்து ஆண்டில் அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 22 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரம் அதிகரித்துள்ளது. தமிழகத்திலே இவர் தான் அதிக சொத்து கணக்கு காட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அதே போன்று பெரியகுளம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது மறுசீரமைப்புக்கு பின் தேனி தொகுதியாக அந்த தொகுதியின் வேட்பாளருமான ஜே.எம்.ஆரூண் கடந்த முறை 15 கோடியே 35 லட்சம் சொத்து இருப்பதாக கணக்கு காட்டினார்.
ஆனால், இம்முறை ரூ. 14 கோடியே 14 லட்சம் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 21 லட்சம் குறைந்துள்ளதாக தெரிகிறது.
தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக சொத்து குறைத்து காட்டியவர் இவர் தான் என டிவியில் விளம்பரம் போடாத குறையாக காங்கிரஸ் தொண்டர்கள் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications