திமுக தேர்தல் அலுவலகத்தை சூறையாடிய பெரியார் தி.க.வினர்
சென்னை: கோவையில் ராணுவ வாகனங்களைத் தாக்கிய பெரியார் தி.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில், திமுக தேர்தல் பணிமனையை பெரியார் தி.கவினர் இன்று தாக்கி சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கோவை அருகே நேற்று இலங்கைக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்வதாக சந்தேகப்பட்டு ராணுவ டிரக்குகளை நிறுத்தி பெரியார் தி.க.வினர் தாக்குதல் நடத்தினர். ஐந்து டிரக்குகள் இதில் சேதமடைந்தன.
இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் திமுக தேர்தல் பணிமனையை பெரியார் தி.கவினர் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில் 93-வது வட்ட தி.மு.க. தேர்தல் பணிமனை அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவில் பெரியார் தி.க. தொண்டர்கள் வந்தனர்.
அங்கிருந்த திமுகவினரை அவர்கள் அடித்துத் தாக்கினர். பின்னர் அலுவலகத்தில் இருந்த கம்ம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை நொறுக்கி உடைத்தனர்.
இந்த திடீர் தாக்குதலில் 93-வது வட்ட தி.மு.க. செயலாளர் ரவியின் மகன் ராஜேந்திரன், ராஜேஷ், சுந்தர், பாலாஜி ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸில் திமுக சார்பில் புகார் தரப்பட்டது.
போலீஸார் புகார் பதிவு செய்து பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த தமிழரசன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தமிழரசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியார் சிலை உடைப்பு..
இந்த சம்பவத்தின் பரபரப்பு தீருவதற்குள் அதே வி.எம். தெருவில் உள்ள பெரியால் சிலை அடித்து உடைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மோதல் வெடிக்காமல் தடுக்கும் பொருட்டு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications