ரயில் கடத்தல் குறித்து துப்பு தந்தால் ரூ. 25,000 பரிசு -போலீஸ்
சென்னை: சென்னையில் மின்சார ரயிலை கடத்தியவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னையில் ரயிலை கடத்தி சென்று வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 4 பேர் பலியானார்கள். அவர்களின் மூன்று பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
நான்காவது நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததாலும் அவர் கையில் தேஜராஜ் என தெலுங்கில் பச்சை குத்தப்பட்டிருப்பதையும் அடுத்து அவர் ஆந்திராவை சேர்ந்த நக்சலைட்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.
இந்நிலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்தின் மேற்பார்வையில் 6 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் தேஜராஜ் என்பவரின் புகைப்படத்தை கையில் எடுத்து கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தொலைபேசி பூத் ஒன்றில் அவர் வெளி மாநிலங்களுக்கு தொலைபேசியில் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கு கடைசியாக தொலைபேசியில் பேசியிருப்பது தொடர்ந்து நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான இரண்டு போலீஸ் தனிப்படை ஆந்திரா விரைந்துள்ளது. ஒன்று திருப்பதியிலும், ஒன்று ஹைதராபாத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆந்திர போலீசார் உதவி வருகின்றனர்.
அப்போது திருப்பதி போலீசார் தேஜராஜின் கூட்டாளிகள் என்ற சந்தேகத்தில் இருவரை கைது செய்தனர். அவர்களிடம் தமிழக போலீசார், ஆந்திரா போலீஸ் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேஜராஜின் புகைப்படம் மற்றும் கை ரேகை அடையாளம் ஆகியவை ஏற்கனவே போலீசிடம் இருக்கும் நக்லைட்கள் பட்டியலில் இருக்கிறதா என ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் கூறுகையில்,
அடையாளம் தெரியாத வாலிபர் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மர்ம நபரின் உடலை வாங்க இதுவரை யாரும் வராததால், அவர் மீது சந்தேகம் வலுக்கிறது. திருப்பதிக்கு சென்று பார்த்த போது அந்த விலாசத்தில் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
ரயில்வே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்பட மொத்தம் 5 தனிப்படை போலீசார் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர். இந்த வழக்கில் துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும். 044-22502550, 044-22502510 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். துப்பு கொடுப்பவருடைய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
ஆந்திரா சென்றுள்ள தனிப்படையினர் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார்கள் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications