கோடை-சென்னையில் பரவும் சின்னம்மை!

கோடை காலம் துவங்கியதும் உஷ்ணம் சம்பந்தமான நோய்களும் மனிதர்களை தொற்றி கொள்கிறது. உஷ்ண நோய்களில் முக்கியமானது சின்னம்மை.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் இந்த நோயின் அதிகம் தாக்கம் தெரியும். ஆனால் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக பிப்ரவரி மாதத்திலே இந்த நோய் லேசாக பரவியது. இதையடுத்து தமிழக அரசு சரியான தடுப்பு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கிய நிலையில் இன்று சென்னையில் இரண்டு பேருக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் தண்டையார்பேட்டையில் அரசு மருத்துவமனையி்ல சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெரிசிலா ஜோஸ்டர் வைரஸ் என்ற கிருமியால் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 10 முதல் 21 நாள் வரை காய்ச்சல், தலைவலி, கொப்பளங்கள் போன்றவற்றால் அவதிப்பட நேரிடும். இது குழந்தைகளை விட பெரியவர்களை தான் அதிகம் பாதிக்கிறது. என்றாலும் தாய்மார்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த நோய் தும்மல், இருமல் போன்றவற்றால் காற்றில் எளிதில் பரவிவிடும். முகத்தை தவிர்த்து உடலின் பிற பகுதியில் நோயின் தாக்கம் இருக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் புரதம், நீர்ச்சத்துள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது அவசியம்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், சென்னையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை 2 பேர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். உரிய சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்தும் ஸ்டாக் உள்ளன என்றார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!











Click it and Unblock the Notifications