மாணவரை கடத்தி 'ஹோமோ'!-50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
சேலம்: சேலத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவரை கடத்தி, அவரை ஹோமோ செக்சில் ஈடுபடுத்திய கும்பல் அதை வீடியோ படம் எடுத்து ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டியது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டு அவர்கள் அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
சேலம் கோரிமேடு கே.ஆர்.தெருவை சேர்ந்த தியாகராஜன், குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி, மகள் மற்றும் மகன் கார்த்திக் (20) ஆகியோர் மட்டும் சேலத்தில் வசித்து வருகின்றனர். கார்த்திக் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
விலங்குகளை வளர்ப்பதில் பிரியம் கொண்ட கார்த்திக்கை கே.கே.நகரை சேர்ந்த ஷாஜகான் என்பவரின் மகன்கள் முஸ்தபா (27), முபாரக் (25) ஆகியோர் அணுகி தங்களிடம் வாத்துக்கள் இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றனர்.
இந்த இருவரும் கார்த்திக்கின் வீட்டில் கார் டிரைவர்களாக வேலை பார்த்தவர்கள்.
இதையடுத்து அவர்களுடன் சென்ற கார்த்திக்கை கே.கே.நகர் ஜெயராம் தெருவில் உள்ள தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சகோதரர்கள் இருவரும் மேலும் 5 பேரோடு சேர்ந்து தாக்கி அவரை கட்டிப் போட்டனர்.
மேலும் அந்த கும்பல் கார்த்திக்கை வலுகட்டாயமாக ஹோமோ செக்சில் ஈடுபட வைத்துள்ளது. அதை செல்போன் கேமரா மூலமாக படமும் பிடித்துள்ளனர்.
பின்னர் உன் தந்தையிடம் கேட்டு ரூ. 50 லட்சம் பணத்தை வாங்கி கொடு, இல்லையென்றால் நீ எங்களுடன் நிர்வாணமாக ஹோமோ செக்சில் ஈடுபட்ட வீடியோ வெளியிடுவோம் என கார்த்திக்கை மிரட்டினர்.
இந்த மிரட்டலால் பயந்து போன கார்த்திக் முதல் கட்டமாக தனது செல்போன் மற்றும் 2 பவுன் தங்கசெயின் ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்துள்ளார். தனது தந்தையிடம் பணத்தை வாங்கி தருவதாகவும், தன்னை வெளியே விடுமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த கும்பல் கார்த்திக்கிடம் வெற்று பத்திரம் ஒன்றில் கையெழுத்து வாங்கி கொண்டு, அவரை விடுவித்தது. வெளியில் வந்ததும் கார்த்திக், குவைத்தில் இருக்கும் தனது தந்தை தியாகராஜனுக்கு போன் செய்து கண்ணீர் மல்க நடந்ததை விவரமாக தெரிவித்தார்.
அவர் உடனே சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் ஜான் நிக்கல்சனிடம் தொலைபேசியில் புகார் கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில் போலீசார் அந்த கும்பலை சேர்ந்த முஸ்தபா, முபாரக், சின்னவீராணத்தை சேர்ந்த திருமுருகன் (27), இளவரசன் (22), கன்னங்குறிச்சியை சேர்ந்த கோபால் (22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
கடத்தலுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் சுசீந்திரன் மற்றும் அவரது நண்பர் ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications