சோனியாவின் சென்னை-புதுச்சேரி பிரசாரம் திடீர் ரத்து!

இத் தகவலை காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்தும் இன்று நடக்கவிருந்த பிரசாரக் கூட்டங்களில் பேச சோனியா திட்டமிட்டிருந்தார்.
ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் சென்னை கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர்.
இந் நிலையில் சோனியா தனது சென்னை, புதுச்சசேரி பிரசாரக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துள்ளார். இத் தகவலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் உறுதி செய்தார்.
முன்னதாக சோனியா காந்தியின் வருகையையொட்டி புதுச்சேரியிலும், சென்னையிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை வர இருந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்லவும் அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்பி தீவுத்திடல் அருகே உள்ள ஐ.என்.எஸ். ஹெலிபேட் தளத்தில் இறங்கவும்,
அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் தீவுத் திடல் மேடைக்கு வந்து தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். தீவுத் திடலில் இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பூவை ஜெகன்மூர்த்தி, ஸ்ரீதர் வாண்டையார் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பேச இருந்தனர்.
கருணாநிதி வர மாட்டார் என அறிவிப்பு...
இந் நிலையில் முதுகு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி இன்று தான் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார்.
எனவே அவரால் சோனியா காந்தி கூட்டத்திற்கு வர முடியாத நிலை உள்ளதாக காங்கிரசிடம் திமுக தரப்பு தெரிவித்தது.
இந் நிலையில் சோனியா காந்தியே தனது கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
முன்னதா சோனியா காந்தியின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேடை அமைக்கும் பணி தொடங்கியதுமே தீவுத்திடல் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. செக்போஸ்ட் அமைக்கப்பட்டு தீவுத்திடலுக்குள் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் தீவுத்திடல் முழுவதும் சோதனை செய்து வந்தனர். மோப்பநாய்களும் மைதானம் முழுவதும் வலம் வந்து கொண்டே இருந்தன. ஏராளமான போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படையினரும் தீவுத்திடலில் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications