அவதூறு பேச்சு: சஞ்சய் தத்-அமர்சி்ங் மீது வழக்கு
லக்னெள: உத்தர பிரேதச முதல்வர் மாயாவதிக்கு கட்டிபிடி வைத்தியம் செய்ய தயாராக இருப்பதாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாடி கட்சி பொது செயலாளர்கள் சஞ்சய் தத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் மவு என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி பொதுசெயலாளரும், நடிகருமான சஞ்சய் தத் தனது தாயார் ஒரு முஸ்லிம் என்பதால் தான் தடா வழக்கில் கைது செய்தபோது மோசமாக நடத்தினர் என பேசினார். இதையடுத்து அவர் மீது மத உணர்வை தூண்டுவதாக குற்றம்சாட்டப்பட்டு, வழக்குபதிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடரப்பட்ட போதிலும் அவர் தனது சர்ச்சைக்குறிய பேச்சுக்களை மாற்றி கொள்ளும் முடிவில் இல்லை. தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.
அடுத்து பிஜ்னேர் பகுதியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், தான் நடித்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ் (தமிழில் அந்த படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் கமல் நடிப்பில் வெளிவந்தது) படத்தில் வந்ததை போல் உத்தர பிரதேசம் முதல்வர் மாயாவதிக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்ய தயாராக இருப்பதாகவும், மாயாஜால முத்தம் கொடுக்கவும் ரெடி என பேசினார்.
இதையடுத்து அவர் மீது மூன்றாவதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் மீது பிஜ்னேர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
அமர் சிங் மீது வழக்கு...
இந்த கூட்டத்தில் சர்ச்சை இதோடு முடிந்துவிடவில்லை. அடுத்து பேசிய சமாஜ்வாடி கட்சியின் மற்றொரு பொது செயலாளர் அமர்சிங் பேசுகையில், வாஜ்பாய்க்கும், மாயாவதிக்கும் மூன்று முறை திருமணம் நடந்தது. ஆனால் ஒரு முறை கூட விவாகரத்து ஆகவில்லை என்றார்.
அதாவது பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் மூன்று முறை கூட்டணி வைத்துள்ளன என்பதை குறிக்கும் வகையில் சொல்வதாக அவர் சொன்னார். இதையடுத்து அமர்சிங் மீதும் மாயாவதியை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications