தமிழகத்தில் இன்று அத்வானி பிரசாரம்-மோடியும் வருகை
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நடிகை ஹேமமாலினி, ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள். இன்று அத்வானி நாகர்கோவிலில் பிரசாரம் செய்கிறார்.
இதுகுறித்து பாஜக மீடியா தொடர்பாளர் கே.டி.ராகவன் கூறுகையில், அத்வானி, நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நடிகை ஹேமமாலினி ஆகியோர் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கின்றனர்.
அத்வானி இன்று காலை தூத்துக்குடி வந்து அங்கிருந்து நாகர்கோவில் சென்று பிரசாரம் செய்கிறார்.
பிற்பகலில் அவர் ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட பரமக்குடியில் திருநாவுக்கரசரை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.
மாலையில் சென்னை வந்து அங்கு பிரசாரம் மேற்கொண்டு விட்டு பின்னர் டெல்லி கிளம்புகிறார்.
மூத்த தலைவரான வெங்கையா நாயுடு ஏற்கனவே ஒரு வாரமாக தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், வேலூர், திருச்சி, பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.
நரேந்திர மோடி 9ம் தேதியும், ராஜ்நாத் சிங் 10ம் தேதியும் வருகிறார்கள்.
ஹேமமாலினியின் வருகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றார் ராகவன்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications