பாதுகாப்பு வளையம் 2.5 சதுர கி.மீட்டராக குறைப்பு

Subscribe to Oneindia Tamil

Lankan Troops
கொழும்பு: புதுமாத்தளன் பாதுகாப்பு வளையப் பகுதியின் பெரும் பகுதியை பிடித்து விட்ட நிலையில் அப்பகுதியின் பாதுகாப்பு வளைய அளவை 2.5 சதுர கிலோமீட்டராக ராணுவம் குறைத்துள்ளது.

இதன் மூலம் கரயான்முள்ளிவாய்க்கால் பகுதியின் தெற்கிலிருந்து 2 கிலோமீ்ட்டர் நீளமும், 1.5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக பாதுகாப்பு வளையப் பகுதி சுருக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

35 விடுதலைப் புலிகள் பலி

இதற்கிடையே, புதிய பாதுகாப்பு வளையப் பகுதிக்கு வெளியே நடந்த கடும் சண்டையில் 35 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளின் மண் அரண் வியாழக்கிழமை தகர்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு புகுந்த ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த சண்டையில் 35 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தரப்பில் ஏற்பட்ட சேதத்தை அது வெளியிடவில்லை.

தற்கொலைப் படைத் தாக்குதல் முறியடிப்பு..

இதேபோல, சனிக்கிழமை வடகிழக்கு முல்லைத்தீவில் கடற்புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலை முறியடித்து விட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் மகேஷ் கருணாரத்னே கூறுகையில், அதிகாலை 3 மணியளவில் கடற்படை சிறப்பு படையின் படகு, ஒரு தற்கொலைப் படை படகை தாக்கி அழித்தது. கடற்புலிகளின் மேலும் இரு படகுகளும் அழிக்கப்பட்டன. 3 படகுகளை கடற்படை பிடித்தது. இந்தத் தாக்குதலில் 14 கடற்புலிகள் கொல்லப்பட்டனர்.

கடற்படை ரோந்துப் படகுகளை குறி வைத்து கடற்புலிகள் வந்தபோது அவற்றை கடற்படை அழித்தது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+