Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் நிலைமை மகா மோசமாக உள்ளது: ஐ.நா.

Subscribe to Oneindia Tamil

UN logo
நியூயார்க்: இலங்கையில் நிலைமை மேலும் மேலும் மோசமாகி வருகிறது. அங்குள்ள நிலைமை குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.வைச் சேர்ந்த சுயேச்சையான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐ.நாவைச் சேர்ந்த சுகாதாரம், குடிநீர், உணவுத் திட்டங்களைச் சேர்ந்த நிபுணர்களான ஆனந்த் குரோவர், பிலிப் ஆல்ஸ்டன், ஓலிவியர் டி ஷட்டர், காத்தரீனா டி அல்பர்க்யூ ஆகியோர் இணைந்து இதுதொடர்பாக வெளியி்ட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் இனப் பிரச்சினை மிகவும் சிக்கலாகி வருகிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் நடந்த இனப்படுகொலை குறித்தும், அங்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சர்வதேச அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் தற்போது நிலவும் மனிதாபிமான நெருக்கடி பெரும் கவலை தருகிறது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து தெளிவான கணக்கு இல்லை. ஒளிவுமறைவில்லாத நிலை அங்கு காணப்படுகிறது.

இருப்பினும் கடந்த 3 மாதங்களில் மட்டும் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என நம்ப முடிகிறது. இருப்பினும் இதுகுறித்து இலங்கை அரசு வெளிப்படையாக எதையும் சொல்லாமல் உள்ளது கவலை தருகிறது.

போர் முனைக்கு பத்திரிக்கையாளர்கள், மனிதாபிமான குழுக்களை அனுப்ப இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருவது வருத்தத்திற்குரியது.

போர் பாதித்த பகுதியில் முடங்கியிருக்கும் அப்பாவி மக்களுக்கு உணவு, மருந்துகள், குடிநீர், துப்பறவு வசதி சுத்தமாக தரப்படவில்லை.

அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளும், உரிமைகளும் கூட தரப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட மரண தண்டனைக்குச் சமமானது.

தற்போது போர் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ள மக்ளுக்கு அனுப்பப்படும் உணவு, மருந்து ஆகியவை போதுமானதாக இல்லை. மேலும் உயிர் காக்கும் மருந்துகளை இப்பகுதிகளுக்கு அனுப்புவதில் இலங்கை அரசு வேண்டும் என்றே தாமதம் செய்து வருகிறது அல்லது அனுப்பாமல் தடை விதித்து வருகிறது.

மனித உரிமைச் சட்டங்களின்படியும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் படியும்தான் தாங்கள் நடந்து வருகிறோம் என்பதை உலக சமுதாயத்திற்கு நிரூபிக்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கருப்புப் பட்டியலில் மனித உரிமை கண்காணிப்பக அதிகாரி..

இதற்கிடையே, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் அதிகாரி ஒருவரை இலங்கை அரசு கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

தனது நாட்டின் குடியேற்றச் சட்டங்களை மீறும் வகையில் அவர் நடந்து கொண்டதாக இதற்கு இலங்கை அரசு காரணம் தெரிவித்துள்ளது.

கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள அதிகாரியின் பெயர் அன்னா நீஸ்டாட். இதுகுறித்து இலங்கை குடியேற்றப் பிரிவு ஆணையாளர் அபயகூன் கூறுகையில், அன்னா, போலியான ஆவணங்களின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்குள் நுழைந்துள்ளார்.

பல்வேறு விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு அமைப்புகளின் உதவியுடன் அவர் வவுனியாவுக்குச் சென்றுள்ளார். மேலும் தவறான தகவல்களையும் அவர் சேகரித்துள்ளார்.

சுற்றுலா விசா மூலம் உள்ளே வந்த அவர் இவ்வாறு செய்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.

தன்னை ஒரு வக்கீல் என்றும் அன்னா கூறிக் கொண்டுள்ளார் என்றார் அபயகூன்.

சமீபத்தில் இலங்கை நிலவரம் குறித்து வெளியுறவு விவாகரங்களுக்கான அமெரிக்க செனட் கமிட்டியின் முன்பு ஆஜராகி எடுத்துரைத்தார் அன்னா என்பது நினைவிருக்கலாம்.

அப்போது, இலங்கையில் இடம் பெயர்ந்து வந்த மக்களுக்காக அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்கள் கிட்டத்தட்ட சிறையைப் போலவே உள்ளன. அந்த முகாம்களைச் சுற்றிலும் கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. இயந்திரத் துப்பாக்கிகளுடன் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மனிதாபிமான சட்டங்களையும், மனித உரிமைகளையும் மீறும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.

இதனால் இலங்கை அரசு கோபமடைந்து தற்போது அவரை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+