மன்மோகன் வருகை: ஹெலிகாப்டர் பயணம் ரத்து-காரில் சென்ற ஜெ.
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் வரும் விமானம் தரையிறங்கிய பிறகே அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் பறக்க அனுமதி கொடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து அவர் ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு காரில் சென்றார்.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க சென்னை வந்தார்.
அவர் மாலை 4.20 மணிக்கு துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் ஹெலிபேட் தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.
மன்மோகன் கிளம்புவதற்கு சற்று முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பல்லாவரத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் ஆவடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.
இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகள் பிரதமர் மன்மோகன் சிங் வரும் விமானம் விரைவில் தரையிறங்க இருப்பதால் அதன் பின்னர் தான் ஹெலிகாப்டரை இயக்க அனுமதி வழங்க முடியும் என ஜெயலலிதாவிடம் கூறினர்.
இதையடுத்து ஜெயலலிதா தனது ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு, காரில் ஆவடி புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கு திருவள்ளூர் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதற்கிடையே சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் அங்கிருந்து மாலை 4.50 மணிக்கு விமானம் மூலம் டெல்லி பறந்தார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications