தேனி அருகே பஸ்கள் மோதல்-42 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி அருகே தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 42 பேர் படுகாயமடைந்தனர்.

மதுரையில் இருந்து போடி நோக்கி ஒரு தனியார் பேருந்தும், போடியில் இருந்து தேனி வழியாக திருமங்கலத்துக்கு மற்றொரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தன.

இந்த இரு பஸ்களும் தேனி அருகே கோடாங்கிபட்டி பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் இரண்டு பஸ்களின் முன்பகுதிகளும் நொறுங்கின.

பஸ்சில் பயணம் செய்த தெப்பம்பட்டியை சேர்ந்த பால்பாண்டி(23), சீனிவாசன்(27), போடி ஈஸ்வரன்(40), ராசிங்காபுரம் பொம்மையன்(60), சில்லமரத்துபட்டி சந்திரகுமார்(28) உட்பட 42 பேர் படு காயமடைந்தனர்.

தேனி, போடி, சின்னமனூரில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் வேன்களில் அவர்கள் ஏற்றி செல்லப்பட்டு, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிகச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+