Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கடத்தப்பட்ட பெண்கள் திண்டிவனத்தில் கற்பழிப்பு-7 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நான்கு வடநாட்டு பெண்களை கடத்தி சென்ற 12 பேர் கும்பல் அவர்களை திண்டிவனம் லாட்ஜில் அடைத்து வைத்து கற்பழித்துள்ளது. அந்த பெண்களை மீட்ட போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 7 பேர கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணாநகரில் இரண்டாவது தெருவில் உள்ள டபிள்யூ பிளாக்கில் தேஜ் கரண்சிங் என்பவர் வசித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கோடை விடுமுறைக்காக அவரது வீட்டுக்கு டெல்லியிலிருந்து அவரது அண்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி அவர்களில் தன்பாலால் மனைவி தானேஷ் (27), மோகன் லால் சர்மாவின் இரண்டு பெண்கள் கல்பனா (22), அனு (20) ஆகிய மூவரும் தேஜ் கரண்சிங் மனைவி அனிதாவுடன் (35) சென்னையை சுற்றி பார்க்க சென்றனர்.

இரவு வடபழனியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்துவிட்டு நான்கு பேரும் தங்களது காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களது கார் வடபழனி 100 அடி சாலையில் வந்த போது மர்ம கும்பல் ஒன்று காருக்கு குறுக்கே வந்து தங்களது பைக்கை நிறுத்தி வழிமறித்தது.

மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கத்தியை காட்டி அந்த பெண்களை மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த பெண்களை காரோடு சேர்த்து கடத்தியுள்ளனர். பின்னர் அவர்களை திண்டிவனத்தில் இருக்கும் லாட்ஜில் அடைத்து வைத்துள்ளது.

இந்நிலையில் அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் டெல்லியில் இருக்கும் மோகன்லால் சர்மாவுக்கு, போன் செய்து ரூ. 20 லட்சம் வேண்டும் என கூறி மிரட்டியுள்ளான். பணத்தை தயார்செய்து வைக்குமாறு அவருக்கு உத்தரவு போட்டான். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து போன் செய்வதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.

இதையடுத்து மோகன்லால் விவரத்தை கரண் சிங்கிடம் சொல்ல, அவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் புகார் செய்தார். இதையடுத்து அவர் 10 தனி படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் மோகன்லால் சர்மாவுக்கு மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை கண்டுபிடித்து அதிலிருந்து விசாரணையை துவக்கினர். அதே நேரத்தில் கடத்தப்பட்ட காரின் நம்பரை கொடுத்து சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் அந்த கும்பலிடம் இருந்து மீண்டும் போன் வந்துள்ளது. அதில் பேசிய ஒருவன் அண்ணாநகர் சரவண பவன் அருகே வரும் இருவரிடம் பணத்தை கொடுக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து கரண்சிங் பணத்துடன் அங்கு சென்றார். இந்நிலையில் அந்த இடத்தில் மறைவாக இருந்த போலீசார் பணத்தை வாங்க வந்தவர்களை சுற்றி வளைத்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது. அவர்களுக்கும் கடத்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தாங்கள் பணத்தை மட்டுமே வாங்க வந்ததாக கூறினர். அவர்களது பெயர் குபேரராஜா (20), தினேஷ் காந்த் (23) என்பது தெரிய வந்தது.

அப்போது அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 12 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்களை திண்டிவனம் லாட்ஜில் அடைத்து வைத்து மாறி மாறி கொடூரமாக கற்பழித்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டனர்.

இந்நிலையில் பணம் வாங்க சென்றவர்களிடம் இருந்து தகவல் கிடைக்காததை அடுத்து திண்டிவனத்தில் 4 பெண்களையும் அடைத்து வைத்து கற்பழித்து வந்த அந்த கும்பல் அந்த பெண்களை அப்படியே விட்டுவிட்டு தலைமறைவானது. போலீசார் அந்த பெண்களை மீட்டு வந்தனர்.

இந்த கற்பழிப்பு சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த லாட்ஜ் மானேஜர் கருணாநிதியை கைது செய்தனர். அந்த கும்பலை சேர்ந்த சுகுமார் (29), ரூபேஸ்காந்தி (20), மோகன் (20) மற்றும் எலக்ட்ரிஷியன் ராஜகுரு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் கட்டப்பஞ்சாயத்து அடிதடி போன்ற சிறு சிறு குற்றவர்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தவர்கள் என்றும், அவருக்கு எம்எல்ஏ ஒருவரின் ஆதரவு இருப்பதாகவும் அதனால் அட்டூழியம் செய்து வருவதாகவும் உள்ளூர்காரர் ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் இதற்கு முன்னர் பல பெண்களை பலவந்தமாக கற்பழித்திருப்தாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்கள் யாரும் புகார் செய்யாததையடுத்து இவர்களது ஆட்டம் அதிகரி்த்து இருந்தது. தற்போது இது ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+