மதுரை உதவி ஆணையர்-இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
மதுரை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மதுரை காவல்துறை உதவி ஆணையர் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மு.க.அழகிரி போட்டியிடும் மதுரை தொகுதியில் பெருமளவில் தேர்தல் விதி மீறல்களும், முறைகேடுகளும், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும் நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்தன.
இதையடுத்து மதுரைக்கு கூடுதல் தேர்தல் பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்தது. மேலும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி மதுரை தொகுதியில் தேர்தல் பார்வையாளர்களும், அதிகாரியும் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டு புதிய கமிஷனராக ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தங்கவேலுவும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை திலகர் திடல் உதவி ஆணையர் ஜெயக்குமார் கவனிப்பார்.
அதேபோல கரிமேடு இன்ஸ்பெக்டரும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது பணியை திலகர் திடல் இன்ஸ்பெக்டர் பார்த்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications