வாக்காளர்களுக்கு சேலை-மதுரையில் திமுகவினர் சுற்றிவளைப்பு
மதுரை: மதுரையில் வாக்காளர்களுக்கு சேலை வினியோகம் செய்த திமுகவினரை பிடித்த அதிமுக கூட்டணி கட்சியினர் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மதுரையில் திமுக சார்பில் தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரியும், அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மோகனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையி்ல் இங்கு திமுகவை சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பெண்களுக்கு இலவ சேலைகளை வழங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார் கொடுத்த வண்ணம் இருக்கின்றது.
இந்நிலையி்ல நேற்று தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவைச் சேர்ந்தவர்கள் சிலர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாக்காளர்களுக்கு சேலை வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அதிமுக கூட்டணி கட்சியினர் சேலை கொடுத்தவர்களை கையும், களவுமாக பிடித்து தேர்தல் பார்வையாளரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் மதுரை 67வது வார்டு தண்டல்காரன்பட்டி இரண்டாவது தெருவில் திமுகவைச் சேர்ந்த ராஜா, பழனிச்சாமி, கனகராஜ் ஆகியோர் வாக்காளர்களுக்கு சேலை வழங்கினர். அவர்களையும் அதிமுக கூட்டணியினர் சுற்றி வளைத்து பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications