ராமநாதபுரத்தில் 6 பேருக்கு சிக்குன்குன்யா காய்ச்சல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் அருகே உள்ள கிராமத்தில் 6 பேருக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்ப்டடது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் கடலோர கிராமங்களில் மர்ம வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. கடந்த 10 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாம்பன் அருகிலுள்ள தெற்குவாடி கிராமத்தில் 6 பேருக்கு சிக்குன்குன்யா காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் ஒரு வித பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறையின் சார்பாக ராமநாதபுர மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரில் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை துணை இயக்குநர் உமா மகேஸ்வரி உறுதிபடுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications